×

நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்க பெருஞ்சாணியில் 50 கன அடி தண்ணீர் திறப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும், முக்கடல் அணை நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.   முக்கடல் அணையில் தண்ணீர் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கையாள தொடங்கி உள்ளது. அதன்படி பெருஞ்சாணி அணையில் இருந்து குடிநீருக்காக 150 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் தற்போது முதற்கட்டமாக பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 50 கன அடி தண்ணீர் நேற்று முதல் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையில் தண்ணீரை தேக்காமல், அணைக்கு முன் மார்த்தால் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி, அதில் தடுப்புகள் அமைத்து, பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து தண்ணீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  

வழக்கமாக பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் வரும் தண்ணீரை வழியோர பகுதிகளில் மின் மோட்டார் மூலம் சிலர் விவசாய பணிகளுக்காக எடுப்பார்கள். இந்த முறை இதை கண்காணிப்பதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் வரும் தண்ணீரை மின் மோட்டார் மூலம் எடுத்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சரவணக்குமார் எச்சரித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gorge ,Nagercoil , Nagercoil, water, peruncani dam
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு