×

8 வழிச்சாலை அமைய மக்கள் விரும்பினால் யார் தடுத்தாலும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

குமரி: சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைய மக்கள் விரும்பினால் யார் தடுத்தாலும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவி்த்துள்ளார். கிருஷ்ணன்கோவில் பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தபோது பேசிய அவர், 8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியூஷ் கோயலும் கூறியுள்ளார். இந்த திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதலால் இந்த திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும். கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தால் மீனவர்கள் உள்பட 20 லட்சம் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம். நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : anybody , 8 way road, Pon.Rathakrishnan, BJP, Kanyakumari
× RELATED மோடி ஜி இந்த அக்கா யாரையும் பார்த்து...