மோடியின் ஆசியுடன் சபரிமலையை கலவரபூமியாக்க பாஜ திட்டமிட்டிருந்தது: கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: சபரிமலையை மோடியின் ஆசியுடன் கலவர பூமியாக்க பாஜ திட்டமிட்டிருந்தது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசினார்.கேரள மாநிலம் கொல்லத்தில் இடதுமுன்னணி வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள முல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் உத்தரவிட்டது. இந்த உத்தரவை புரிந்துக் கொள்ளக்கூடிய அரசுதான் கேரளாவில் உள்ளது. இந்தியா, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஒரு  நாடாகும். உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் ஜனநாயக மரபாகும். அதைத்தான் கேரள அரசும் செய்தது. ஆனால் சபரிமலையை ஒரு கலவர பூமியாக்கவேண்டும்  என்பதுதான் பாஜ.வின் திட்டமாகும். அதற்கு மோடியின் ஆசியும்  இருந்தது.

சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மோடி அரசுதான் கோரிக்கை விடுத்தது. பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த பாஜ கிரிமினல்களை அனுப்பி வைத்தது. அவர்கள்தான் சபரிமலை சன்னிதானத்தில்  தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தினர்.
ஆனால் சபரிமலையை கலவர பூமியாக்கும்  திட்டத்தை கேரள அரசு கடும் நடவடிக்கைகள் மூலம் தடுத்தது. அவர்கள் போலீசாரை கூட தாக்கினார்கள். ஆனால் போலீசார் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொண்டனர். சபரிமலையை பாதுகாக்கவேண்டும் என்பதுதான் கேரள அரசின் கொள்ைகயாகும். மோடி கேரளா வந்தபோது சபரிமலை பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் கர்நாடக மாநிலம் மங்களூரில் பேசும்போது சபரிமலையையும்  ஐயப்பனையும் குறிப்பிட்டு பேசினார். கேரளாவில் சபரிமலை என்று பேசினாலே அரசு கைது செய்கிறது என்று பொய் குற்றச்சாட்டை கூறினார். இது கேரளாவை அவமானப்படுத்தும் செயலாகும். பிரதமர் போன்று உயர் பதவியில் இருப்பவர்கள் கண்ணியமாக  நடந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajji ,Pinarayi Vijayan ,Modi ,Sabarimala ,Kerala , Modi's, Bhajji p, Sabarimala,Pinarayi Vijayan
× RELATED சொல்லிட்டாங்க...