×

100 சதவீத ஓட்டு போட ஹோண்டா புது திட்டம்

சென்னை: தேர்தலின்போது முறையான போக்குவரத்து வசதி இல்லாதது வாக்களிப்பதற்கு தடையாக இருக்கும் என்பதால், அதற்கான புதிய தீர்வை ஹோண்டா நிறுவனம்  முன்னெடுத்துள்ளது. இருசக்கர வாகனங்களை  வைத்திருக்கும் ஒவ்வொருவரும்  ‘ஒரு பின்னிருக்கை கூட காலியாக செல்லாது’ என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. வாக்குச்சாவடிக்கு செல்லும்போது உங்கள் நண்பரையோ, உறவினரையோ, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையோ உடன் அழைத்துச் சென்று, ஒவ்வொரு இருசக்கர வாகனமும் 2 வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறது.

ஹோண்டாவின் இந்த மிகப்பெரிய சமூக முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா பிரைவெட் லிமிடட் நிறுவன மூத்த துணை தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா,   ‘‘ஒவ்வொரு குடிமகனும்  சமூக விழிப்புணர்வுடன், ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  9870500111 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து வாக்களிப்பதாக உறுதிமொழி எடுத்து  ஆக்டிவ் இந்தியா இயக்கத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honda , 100 percent, vote, Honda's, new project
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...