சாம்சங் ஓபன் டென்னிஸ் போலோனா அசத்தல்

லுகானோ: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சாம்சங் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்லோவகியா வீராங்கனை போலோனா ஹெர்காக் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (115வது ரேங்க்) மோதிய போலோனா (28 வயது, 89வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை  பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்வியாடெக் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய போலோனா 6-3, 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் நடந்துள்ள  17 டபுள்யு.டி.ஏ தொடர்களில் 17 வெவ்வேறு வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>