மாற்றத்தை நோக்கி செயல்படுறோம்....தூத்துக்குடியில் கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை நோக்கி செயல்படுகிறது என தூத்துக்குடியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யத்தின் மக்களவை தொகுதி வேட்பாளர் பொன்குமரனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் பேசியதாவது:  தூத்துக்குடி என்றால்  வன்முறை, துப்பாக்கி சூடுதான் நினைவுக்கு வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.  மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை நோக்கி செயல்படுகிறது. மக்கள் நலனுக்கெதிரான ஆலைகள் வேண்டாம்.  

தூத்துக்குடியில் இன்னும் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் அமைய வேண்டும்.  மாண்டுபோன அரசியல் மான்பை மக்கள் நீதி மய்யம் மீட்டெடுக்கும். நான் இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் நிற்பதாகவே நினைக்கிறேன். பத்து மணிக்கு மேல் டார்ச்லைட் கொண்டு செல்லக்கூடாது என்று தேர்தல் ஆனையம் சொல்லும் அளவிற்கு பிரபலமடைந்துள்ளது நமது சின்னம்.   இவ்வாறு அவர் பேசினார்.கமல் பேசிக்கொண்டு இருக்கும்போதே,  துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஸ்நோலின் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை மேடைக்கு ஏற்றினார். அவர்களில் ஸ்நோலினின் தாய் வனிதா கண்ணீருடன்  பேசியபோது, கமல்ஹாசனும் அழுதார். இவர்களின் இந்த நிலைக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை...