×

குங்குமம், ஐஓசிஎல் இணைந்து நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசு

நாகர்கோவில்: இந்தியாவின் தலைசிறந்த வார இதழான குங்குமம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பெட்ரோல் பல்க் முகவர்களுக்கான போட்டிகள் நடத்தின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு குங்குமம் வார இதழ் சார்பில், குக்கர் மற்றும் மிக்சி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. வில்லுக்குறி குமரன் பெட்ரோல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்தார்தன் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,‘‘இந்தியன் ஆயில் நிறுவனம் காலப்போக்கில் ஏற்படுகிற மாற்றத்திற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 25 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களையும், ஆட்டோமேஷன் ஆக்கி வருகிறோம்.

அடுத்து பொருளாதார சூழல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களையும் நாம் ஏற்று அதற்கேற்ப சிறப்பாக செயல்பட வேண்டும். வரும் காலங்களில் எரிவாயு, சோலார் மற்றும் எலக்ட்ரானிக் கார்கள் வரலாம். இதற்ேகற்ப சார்ஜர் மையங்கள் அமைத்தல் என தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பணமில்லா பரிவர்த்தனை மூலம் 10 சதவீத தள்ளுபடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறோம். மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.200க்கு பெட்ரோல் போடுபவர்களுக்கு ஒரு குங்குமம் புத்தகம் இலவசமாக வழங்கியதுடன், குங்குமம் இதழில் உள்ள போட்டி கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பியவர்களை தேர்வு ெசய்து பரிசுகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற 22 வாடிக்கையாளர்களுக்கும்,

ஐஓசிஎல் வழங்கிய கேஷ் பேக்ஆபரில் அதிக புள்ளிகள் பெற்று முதல் 3 இடங்களை பெற்ற பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு பரிசு தொகை வழங்கினார். நிகழ்ச்சியில், மதுரை மண்டல விற்பனை மேலாளர்கள் சிவக்குமார், ராஜாராம், முதன்மை பொதுமேலாளர் (பொறியியல் பிரிவு) விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டல தலைமை மேலாளர் சண்முகவேல் வரவேற்றார். பெட்ேரால் நிலைய உரிமையாளர் குமரேசன், சமையல் எரிவாயு சங்க நிர்வாகிகள் ராஜாராம், ராமசுப்பிரமணிய பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட விற்பனை அலுவலர் நீரஜ்குமார் நன்றி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ones ,Verma ,IOCL , Verma, IOCL, competition, success, gift to customers
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!