ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 19-ம் தேதி காலை 10 மணி வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பிற்கான  தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகளும் முடிந்துள்ளன. இதன் முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன், தூய வெள்ளி என்ற சொல்லப்படும் 19-ம் தேதி அன்று காலை 10  மணிக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 10:02 மணியளவில் குறுச்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்படும் என தெரிவித்தார்.  இதற்கிடையே, கடந்த 11-ம் தேதி, இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் கேட்டபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 19-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்  தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>