×

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் 500 முறைக்கு மேல் எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்

டெல்லி: பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பாலக்கோட்டில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பழிதீர்க்கும் வகையில் இதுவரை 500 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.  காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் புலவாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி 26-ந் தேதி குண்டுவீசி தாக்குதலை தொடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.

எல்லையோர கிராமங்களில் வசிக்கும் சாதாரண குடிமக்களையும் பாகிஸ்தான் ராணுவம் குறிவைப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நேற்று நடைபெற்ற ரஜோரி தினம் ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் பரம்ஜித் சிங், பாகிஸ்தானுக்கு இந்தியா பலமான முறையில் பதிலடி அளித்து வருவதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்களின் செயல்பாட்டை வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரம்ஜித் சிங், இந்த விவாதத்தில் தலையிட ராணுவம் விரும்பவில்லை எனக்கூறினார். இதைப்போல ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் பரம்ஜித் சிங் உறுதிபட தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,border ,attack ,Palakkot , Balakot Attack, Pakistan Army, Indian Air Force,
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...