×

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகம் வந்தார்

சென்னை: கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று தமிழகம் வந்தார். இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவாக்சின், கோவிஷில்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் வரும் 13ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தடுப்பூசியை அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. முதற்கட்டாக 6 லட்சம் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று தமிழகம் வந்தார். இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பெரிய மேட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி சேமிப்பு கிடங்கு, அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தையும் பார்வையிடுகிறார். இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்….

The post கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகம் வந்தார் appeared first on Dinakaran.

Tags : Union Minister of Health Harshawardan ,Tamil Nadu ,Chennai ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...