2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தின் காகண்ட் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த அபித் வாகே, ஷாஜகான் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு...