இந்தோனேசிய நாடாளுமன்ற தேர்தல் வெளிநாடுகளில் மக்கள் வாக்குப்பதிவு

துபாய்: இந்தோனேசிய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வெளிநாடுகளில் வாழும் அந்நாட்டு பிரஜைகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அபுதாபியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்தோனேசியாவில் வரும் 17ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வெளிநாட்டுவாழ் இந்தோனேசியர்கள் அவர்கள் வாழும் நாட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டை சேர்ந்தோர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் 9 ஆயிரம் பேர் வாக்குப்பதிவுக்கு தகுதியானவர்கள். இவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்  இந்தோனேசியா தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபுதாபியில் இந்தோனேசியா தூதரக வளாகத்திலும், துபாயில் இந்தோனேசியா துணை தூதரகத்திலும் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டளிக்க வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தோனேசியர்கள் உற்சாகமாக காலையிலிருந்தே வாக்களிக்க குவியத் தொடங்கினர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் வாக்களித்தனர். வாக்களித்த பெரும்பாலானவர்களுக்கு சுண்டு விரலில் அடையாள மையிடப்பட்டது.
வெளிநாட்டிலிருந்தபடியே தங்களது அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என வெளிநாட்டுவாழ் இந்தோனேசியர்கள் தெரிவித்தனர். பல்லாண்டுகாலமாக ஓட்டுரிமை கோரும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் இன்னும் ஏக்க பெருமூச்சோடு வெளிநாட்டிலிருந்த படியே வாக்களிக்கும் உரிமைக்காக காத்திருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்