×

புற்றுநோயை குணப்படுத்த முடியும்: மருத்துவ ஆராய்சியாளர்கள் தகவல்

பெங்களூரு: ஜவஹர்லால் நேரு உயர்தர அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் மனீஷ்  இனாம்தார் என்ற மருத்துவர் தலைமையிலான குழுவினர், புற்றுநோய்  குணப்படுத்தக்கூடிய நோய் தான் என்ற தங்களின் ஆய்வு கட்டுரையை அமெரிக்க  ரத்தவியல் துறை சார்பாக வெளிவரும் ‘பிளட்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். இந்த கட்டுரையில் மருத்துவ ஆய்வாளர் இனாம்தார் குறிப்பிட்டுள்ளதாவது: ஸ்டெம்  செல் புரதம் என்னும் அஸ்ரிஜ்( சமஸ்கிருதத்தில் இதை ரத்தம் என்பர்) என்ற  ஒன்றை கண்டுபிடித்துள்ளோம்.

இது வளர்ச்சியுறும் நோயை தடுக்கும் தன்மை  கொண்டது. மேலும் முதிர்ந்த ரத்த செல்களின் அதிகப்படியான உற்பத்தி நிலை  மற்றும் வளர்ச்சியை தடுக்க கூடியது. புதிய ரத்த செல்களை உருவாக்கி வாழ்நாள்  முழுவதும் செயல்திறனுடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது. வௌிப்படையாக  இருக்கும் சில ரத்த செல்கள் பாதிப்படைந்து மரபணு பிறழ்வால் புற்றுநோய்க்கு  வழிவகுப்பதையும் இந்த அஸ்ரிஜ் புரதம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பி53  மரபணு பிறழ்வால் தான் 90 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த பி53 என்ற  புரதம் தான் செல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. ரத்த புற்றுநோயில் 11  சதவீதம் பி53 மரபணு பிறழ்வால் தான் ஏற்படுகிறது. பி53 மரபணுவில்  குறிப்பிடத்தக்க பிறழ்வு இல்லாதபட்சத்தில், ரத்தபுரத அளவு குறைவாக  இருந்தாலும்,  புதிய செல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அஸ்ரிஜ் எனும்  எலும்பு மஜ்ஜை பி53 மரபணுவை பாதுகாக்க கூடியது. இது புற்றுநோயை தடுக்கும்  பாதுகாவலனாகவும் மரபணுவாகவும் அறியப்படுகிறது.

இந்த அஸ்ரிஜ் புரதம்  இல்லாதபட்சத்தில் பி53 மரபணு ரத்த செல்களை அழித்து  புற்றுநோய்க்கு  வழிவகுத்துவிடுகிறது. இதை தான் பி53 மரபணு பிறழ்வு என்று சொல்கிறோம்.  ஆனால் இது போன்ற பிறழ்வு இல்லாமல் கூட சில புற்றுநோய்கள் உருவாவது புதிராக  இருக்கிறது. எங்கள் ஆய்வு இதற்கும் விடையை தருகிறது.   எலும்பு மஜ்ஜை  மாற்று அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். இந்த  சிகிச்சையை எலிக்கு கொடுத்து பரிசோதித்து அறிந்து கொண்டோம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : researchers , Cancer, can, medical researcher, information
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...