×

மாணவர்களை கலங்கடித்த நீட் நீடிப்பது சரிதானா?

மத்திய பாஜ அரசு அமல்படுத்திய  நீட் தேர்வு படுத்தியபாடு ெகாஞ்சநஞ்சமல்ல. நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,  இந்த தேர்வை அமல்படுத்த  தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு, எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. அதையும் மீறி, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வால் பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த அனிதா என்ற  மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக பெரும் கிளர்ச்சி எழுந்தது. இதை தொடர்ந்து நீட்  தேர்வுக்கு விலக்கு கோரி,   சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது மாநில அரசு.

 ஆனால், தற்போது வரை அதற்கு குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் நாடாளுமன்ற  தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க அழுத்தம் தருவோம் என்று தெரிவித்துள்ளது. அதே போன்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும், திமுக தேர்தல்  அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,  அதிமுக நீட் தேர்விற்கு விலக்கு கேட்கவில்லை; தமிழில் நடத்த வேண்டும்  என்று தான் கோரியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stunned ,students,longer?
× RELATED அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார்....