×

நுறுக் ....

பெரும்அபாயம் ஏற்படும்..வைகோ-( மதிமுக பொதுச் செயலாளர் )
பன்முக தன்மைதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. இதை உடைத்து சிதைத்து ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சமஸ்கிருதம் என்பதை திணிக்க நினைத்தால் நாட்டில் பெரும் அபாயம் ஏற்படும்.

ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை..சி.ஆர்.சரஸ்வதி-( அமமுக பேச்சாளர் )
நதிகளை இணைப்போம் என்று கடந்த முறை பாஜக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை ஏன் செய்யவில்லை என்று கேட்காமல் இந்த முறை பாஜ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு ரஜினி வரவேற்பு  தெரிவித்துள்ளார்.

கவனமாகஓட்டு போடுங்கள்...சமுத்திரகனி-( இயக்குநர் )
இது அடுத்த தலைமுறை மாற்றத்தை கொண்டு வரக் கூடிய தேர்தல். முதல் தலைமுறை வாக்காளர்கள் கையில்தான் உள்ளது. மொத்த தலையெழுத்தையும் நீங்கள்தான் மாற்றபோகிறீர்கள். கவனமாக ஓட்டு போடுங்கள்.

எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள்தான்..பாலபாரதி-( மா.கம்யூ முன்னாள் எம்எல்ஏ )
தமிழகத்தின் எல்லா அமைச்சர்களும் ஊழலில் சிக்கி உள்ளார்கள். இல்லையென்றால் பாஜகவுடன் இவ்வளவு நெருக்கமான கூட்டணி அமையுமா. தங்களின் வீடுகளில் சோதனை நடந்து விடுமோ என்ற பயத்தில்தான் அதிமுக  பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

மோடி மீண்டும் வந்தால் ஹிட்லர் ஆட்சிதான்...தமிமுன் அன்சாரி-( ம.ஜ.க பொதுச் செயலாளர் )
நடைபெறவுள்ள தேர்தல் ஜனநாயகத்தை காப்பதற்கான அறப்போர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சிதான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fringe ....
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...