×

13 பேரை சுட்டுக்கொன்னீங்களே... இந்த மண்ணுல எப்படி ஜெயிப்பீங்க?: காரமாக கேட்கிறார் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி

1 மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியை பார்த்து மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?


நாட்டு மக்களுக்கு உதவாத ஒரு பீஸை மையப்படுத்தி தான் பிரச்சாரம் செய்றேன். மோடி என்கிற ஈனப்பிறவியை எல்லோரும் வெறுக்கின்றனர். சுனாமி பேரலை போன்று மோடிக்கு எதிர்ப்பு அலை நாடு முழுவதும் உள்ளது. அவர்கள் இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டிய நாட்களை எண்ணுறாங்க. தூத்துக்குடியில் 13 பேரை  சுட்டு கொன்றீர்களே. இந்த மண்ணில் எப்படி ஜெயிக்க வைப்பாங்க. ஜெயிக்க வைப்பாங்கன்னு நம்பிக்க இருக்கா. ஜெயிக்க வைச்சா அந்த 13 பேரின் ஆவி சும்மா விடாதுல. எந்த நம்பிக்கையில நிக்குறீங்கன்னு தெரியல.

2 உங்களது பிரச்சாரம் எதை மையப்படுத்தி உள்ளது?


ஒருவன் நல்லவன் என்று நம்பி எல்லோரும் 5 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பை ஒப்படைச்சாங்க. இந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு மோடி செய்த நல்லது என்ன?, இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று மக்கள்
கேட்டால் பதில் சொல்ல முடியாது. ஒரே இரவில் பணமதிப்பிழப்பு அறிவிப்ைப தான்தோன்றித்னமாக மோடி வெளியிட்டார். இது குறித்து மக்கள் கேட்டதற்கு கருப்பு பணத்தை ஒழிப்பேன். சுவீஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று ஆரம்பத்தில் மோடி கூறினார். கருப்பு பணத்தை மீட்டீர்களா? எல்லா வங்கி கணக்கிலையும் 15 லட்சம் போட்டீர்களா அல்லது உங்களது கணக்கிலேயே எல்லாவற்றையும் போட்டீர்களா என்று மக்களது கேள்வி. இதற்கு மோடியே பதில் சொல்லட்டும் என்ற நிலை உள்ளது. இந்த கேள்விகளை மையப்படுத்தி தான் பிரச்சாரம் செய்றேன்.

3 திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?


மோடி என்கிற வார்த்தையை தமிழ் அகாரதியில் இருந்து நீக்க வேண்டும்னு தமிழ் மக்கள் எண்ணுறாங்க. ‘மோ’ன்னு, ‘டி’ ன்னு இந்த இரண்டு வார்த்தையை சொல்லும் போது அவ்வளவு வெறுப்பு இருக்கு. அவ்வளவு வெறுப்பு இருக்கிற சூழ்நிலையில் இந்த தேர்தலை சந்திக்கிறோம். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எல்லோரையும் மக்கள் ஆதரிக்கிறாங்க. ஆனால், மக்கள் மத்தியில் சின்ன எதிர்பார்ப்பு இருக்கு. அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் மோடி என்கிற எதிர்பார்ப்பு தமிழ் அகராதியில் இருக்காது.

4 புதிய வாக்காளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?


நான் புதுமையாக யோசிக்கிறேன். புதியவர்களுக்கு வாக்களிக்க விரும்புகிறேன். நான் புதியவர்களுக்கு ஓட்டு போட விரும்புகிறேன் என்று சொன்னால் உங்களை நீங்கள் ஏமாற்றி கொள்கிறீர்கள் என்று அர்த்தம். முதல் ஓட்டு போடும் கல்லூரி மாணவ, மாணவிகள் இவர்களை எல்லாம் பார்த்தாச்சு என்று சலிப்பு தட்டி நோட்டோவிற்கு போடும் நிலை பட்டவர்த்தனமாக தெரிகிறது. அவர்களுக்கு நான் சொல்வது என்ன வென்றால், 5 ஆண்டுகள் தேவையில்லாமல் இந்திய மக்களை கொடுமைப்படுத்திய  மோடி என்கிற முசோலினி, ஹிட்லரை ஒழிக்க வேண்டும் என்று அடிமனதில் தோன்றினால், அந்த மோடியை ஓழிக்கும் ஆற்றல் ராகுலுக்கு மட்டும் தான் இருக்கிறது. எனவே, புதிய வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் மட்டுமே மோடி சோலியை முடிக்க முடியும். புதிதாக உள்ளவர்களுக்கு வாக்களித்தால் செல்லாத ஓட்டாகத்தான் இருக்கும். அப்புறம் வருத்தப்பட வேண்டியது இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Iman Annachi ,earth , comedy actor, Iman Annachchi
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...