×

போலீஸ் சேனல்: பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி ஸ்டேஷனை படுத்திய பாடு

மாங்கனி மாநகர போலீசாருக்கு சமீபத்தில் ரவுடிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து இன்னும் அதிகாரிகள் மீளவில்லையாம். கிச்சிப்பாளையத்தில் உள்ள ரவுடிகள் கொட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டோம் என மார்தட்டிக்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் அந்த ரவுடிக்கும்பல் திறந்தவெளியில் மது பார்ட்டியுடன் பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டி ஹேப்பி பர்த்டே கொண்டாடியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் மாவட்டத்திலேயே ரவுடிகள் போட்ட ஆட்டம், சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியது. இதனால், தனிப்படை அமைத்த உயர் அதிகாரி, பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடி உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

அதில், கத்தியுடன் வசூல்ராஜா பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய ரவுடி சிலம்பரசனை போலீசார் கைது செய்து தூக்கி வந்தார்கள். ஸ்டேஷனில் வைத்து, எங்க போலீஸ் பெயரை கெடுத்திட்டீங்களேடா... என ஒரு தட்டு தட்டினாங்களாம். இதை எதிர்பார்க்காத ரவுடி, ஒரே அடியில் ‘உச்சா’’ போயிட்டானாம். பதறிப்போன காக்கிகள், உடனடியாக டாக்டரை பார்த்து மாத்திரை வாங்கி கொடுத்து, டீ, பன் சாப்பிட வைத்து பத்திரமாக ஜெயிலுக்கு அனுப்பி வச்சாங்களாம். இது தான் தற்போது மாங்கனி நகர காக்கிகள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chanel ,Rowdy Station , Police Channel
× RELATED மோடியின் 70-வது பிறந்தநாளை ஒட்டி...