×

போலீஸ் சேனல்: மலைக்கு மேலே கொட்டுது பழநி போலீசுக்கு வருவாய்

கோடை விடுமுறை துவங்கி இருப்பதால், திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இப்படி வருவோரை பாதுகாப்போடு, உரிய தகவல்களை வழங்கி மலைக்கோயிலுக்கு மேலே அழைத்துச் சென்று திருப்பி அழைத்துக் கொண்டு வருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அணுகும் 200க்கும் அதிக போலி வழிகாட்டிகள் கீழ்மலையில் சுற்றி வருகின்றனர். இதேபோல், மலைக்கோயிலில் பாதுகாப்பு பணிக்கென பல போலீசாருக்கும் ‘டூட்டி’ போடப்படும். இந்த போலி வழிகாட்டிகள் பக்தர்களை ஏமாற்றுவதையே முழு வேலையாகச் செய்கின்றனர். பூஜைப் பொருட்கள் வாங்கித் தருவதிலிருந்து, சிறப்பு வழியில் கூட்டிக் கொண்டு போக பணம் தர வேண்டும். முருகப்பெருமான் சிலையில் வைத்த சந்தனம் வாங்கித் தருகிறேன் எனத் துவங்கி தனக்கென பெரும் கட்டணத்தைக் கேட்டு பறிப்பது வரை இவர்களின் அநியாயங்கள் அதிகம்.

மலைக்கோயிலில் டூட்டி பார்க்கிற போலீசாரை அன்றாடம் இவர்கள் கட்டாயம் ‘கவனித்து’ விடுகின்றனர். இதனால், இந்த போலி வழிகாட்டிகள் எவ்வளவு ஏமாற்று மோசடிகளைச் செய்தாலும், இந்த டூட்டி போலீசார் கண்டுகொள்வதில்லை. ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை கூட்டம் அதிகமிருப்பதால், டூட்டி போலீசாருக்கான கவனிப்பும் பலமாக இருக்கும். எனவே, பழநி மலைக்கோயிலில் தங்களுக்கு டூட்டி தரும்படி ஒவ்வொரு போலீசாரும் தெரிந்த அதிகாரிகளை, அரசியல்வாதிகளை ‘பரிந்துரைக்கென’ முன்னதாகவே ஆள்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். போலி வழிகாட்டிகளை கட்டுப்படுத்த வேண்டிய போலீசாரே, வருவாய் கருதி அவர்களை ஊக்குவிப்பதை கண்டு பக்தர்கள் முகம் சுழிப்பதுடன், ஏமாந்தவர்கள், போலீஸ் இருந்தும் கொடுக்கும் புகாருக்கு மதிப்பின்றி வேதனையுடனேயே கீழ் மலை திரும்புகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Channel ,hill , Police Channel
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை