×

ஐபிஎல் டி20: கோஹ்லி, டி வில்லியர்ஸ் விளாசல், 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,win ,Kohli ,De Villiers ,Punjab , IPL, Kohli, De Villiers, Bengaluru, Punjab
× RELATED 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்