×

எல்லா அமைச்சர்களும் ஊழல்வாதிகள் அதனால்தான் பாஜ-அதிமுக கூட்டணி: பாலபாரதி சுளீர்

சங்கரன்கோவில்: தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசியதாவது:பாஜ தேர்தல் அறிக்கை பழையஅறிக்கை தான். பாஜவின் தேர்தல் அறிக்கையில் பயம் உள்ளது. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளிலும் ராமருக்கு கோயில் கட்டுவோம் என தவறாமல் உள்ளது. அதே வாக்குறுதி இந்த தேர்தல்  அறிக்கையிலும் உள்ளது. ராமர் கோயில் கட்டுவோம் என்பது ராமர் மீதுள்ள அக்கறை, பக்தியினால் அல்ல. இந்திய நாட்டை மத ரீதியாக பிரித்து அதிகாரத்திற்கு செல்லவேண்டும் என்ற உணர்வு தான் பாஜவிடம் உள்ளது.

உலகிலேயே ஒரு மாநில முதலமைச்சர் இறந்ததற்கு கமிஷன் போட்டு விசாரிக்க கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். உண்மையிலேயே அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கு நேர்மையாக இருந்தால், அல்லது ஜெயலலிதாவை  நேசிக்கக் கூடியவர்களுக்கு நேர்மையாக இருந்தால் அவர் எப்படி இறந்தார் என்பதை சொல்லவேண்டும் விசாரணை கமிஷன் போட்டது சரிதானா? நியாயவிலைக்கடைகளில் பாமாயில் 2 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது 2 லிட்டராகிவிட்டது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகிய பொருட்களை மக்களுக்கு  விநியோகிப்பதில்லை. எல்லா அமைச்சர்களும் ஊழலில் சிக்கியிருக்கிறார்கள். இல்லையென்றால் பாஜவுடன் இவ்வளவு நெருக்கமாக கூட்டணி வருமா? தங்கள் வீடுகளில் சோதனை நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். அதனால் தான் அதிமுக,  பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது நாட்டுக்கு நல்லதா என பொதுமக்கள் சிந்திக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ministers ,BJP ,AIADMK ,alliance ,Balabharathi Sleeper , Ministers, corrupt people, BJP, AIADMK, Balabharathi
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...