×

ஐபிஎல் 2019; டி காக் அதிரடி; ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் டி காக், ரோகித் சர்மா ராஜஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் எடுத்திருந்த போது ஆர்ச்சர் பந்து வீச்சில் ரோகித்சர்மா(47) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16, பொல்லார்டு 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் டி காக் 52 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாண்டியா அதிரடியாக விளையாட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,De Gog Action ,win ,Mumbai , IPL 2019, Mumbai Indians, Rajasthan Royals, Rohit Sharma, Rahane
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு