×

ரஃபேல் அறிவிப்புக்கு பின் அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு ரூ.1,100 கோடி வரிச்சலுகை

பாரிஸ்: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது. அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி தள்ளுபடி பற்றி, லி மான்ட் என்ற பரிரெஞ்சு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மோடி பிரதமர் ஆனவுடன் பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் ஆனது. ரஃபேர் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அனில் அம்பானிக்கு ரூ.1,100 கோடி வரியை பிரான்ஸ் தள்ளுபடி செய்துள்ளது. ரிலையன்ஸ் அட்லான்டிக் ஃபிளாக் பிரான்ஸ் என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டில் ஒரு கம்பெனியை அனில் அம்பானி நடத்தி வருகிறார். 2007ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டுவரை 141 மில்லியன் யூரோ பணம் வரியாக செலுத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. ஆனால், 7.6 மில்லியன் யூரோ மட்டுமே வரியாக தர முடியும் என்று அனில் அம்பானி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,French ,Anil Ambani , Anil Ambani,tax relief,France,Rafale,Modi
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...