×

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் : பிரிட்டன் தூதரக அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை

சண்டிகர் : ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தையொட்டி பிரிட்டன் தூதரக அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
 
ஜாலியன் வாலாபாக் படுகொலை

 பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என 379 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டிஷ் அரசின் மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர்.

ஆனால், தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி, ஆயிரம் பேர் கொல்லப்பட்டது உறுதியானது.

நூற்றாண்டு நினைவு தினம்

இதையடுத்து ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவித்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசு சார்பில் ஜாலியன் படுகொலைக்கு ஆழ்ந்த வருத்தத்தை பிரதமர் தெரசா மே தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், பிரிட்டிஷ் - இந்தியா வரலாற்றில் அழியா வடு, என வருத்தம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு தெரசா மே, மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தையொட்டி பிரிட்டன் தூதரக அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் தூதர் டோமினிக் மரியாதை செலுத்தினார்.


அஞ்சலி செலுத்திய பின்னர், டாம்னிக் அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட அவர், ஜாலியன் வாலாபாக் படுகொலை வெட்ககேடான செயல் என்றும் வரலாற்றில் ஒரு அழியா வடு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த துயர சம்பவத்திற்காக  பிரிட்டன் அரசு இதற்கு எப்போதும் வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார். இதனிடையே ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி ட்வீட்

ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினத்தையொட்டி, நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். மேலும்  ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்படாது என அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Britain ,Memorial Day , Jallianwablock, Assassination, Amritsar, Prime Minister Theresa May, Honor, British, Embassy officials
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...