×

26ம் தேதி மீண்டும் விசாரணை கொடநாடு கொலை வழக்கு 10 பேரும் ஆஜராக உத்தரவு

ஊட்டி: ெகாடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் உட்பட 10 பேரும் வரும் 26ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நுழைந்து கடந்த 2017 ஏப்ரல் 24ல் காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பம் கொலை செய்து பின்னர் பங்களாவிற்குள் நுழைந்து அங்கிருந்த ஆவணங்களை  கொள்ளை அடித்து சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி மீது புகார் கூறி பேட்டி அளித்ததையடுத்து சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணைக்கு சரியாக வராத பிஜின்குட்டி, திபு, மனோஜ்சாமி  ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், சயான்,  வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது, அவர்கள் சார்பில் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு வக்கீல்  பாலநந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு வக்கீல் ஆனந்தன், முதன் முறையாக குற்றவாளிகள் சார்பில் மனுதாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வரும் 26ம்  தேதிக்கு ஒத்திவைத்து அன்று 10 பேரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad , Repeated trial,26th, Kodanad murder, case
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை