×

ஏ... இந்தா, பார்த்துக்க... நான் ரவுடி... நான் ரவுடி!...வாக்காளர்களை மிரட்டிய மேனகா

‘‘நீங்க எனக்கு முக்கியம் இல்ல... உங்களுக்குதான் என்னோட தயவு தேவைப்படும். எனக்கு ஓட்டு போடலேன்னு உங்களுக்கு எந்த வேலையும் செஞ்சு தர மாட்டேன்’’ - இப்படிப்பட்ட பிரசாரத்தை கேட்டிருக்கிறீர்களா?  இப்படிப்பட்ட தொணியில் பேசி வம்பில் சிக்கியிருக்கிறார் மத்திய அமைச்சரும், பாஜ தலைவருமான மேனகா காந்தி.மகன் வருண் காந்திக்காக தனது பிலிபிட் தொகுதியை தாரை வார்த்து விட்டு, உபியின் சுல்தான்பூரில் இம்முறை களமிறங்குகிறார் மேனகா காந்தி. தொடர் வெற்றியால் மிதப்பில் இருக்கும் மேனகா, தனது தொகுதியில்  முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் துரப்கானி பகுதியில் நேற்று பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேனகா பேசியது இதுதான்:மக்களின் அன்பால் நான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன். பிலிபிட் தொகுதியில் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். தொகுதியில் ஒருவர் என் மீது குறை கூறினாலும் கூட, எனக்கு ஓட்டு போட வேண்டாம்.  இந்த தொகுதியில் என்னுடைய வெற்றியானது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், முஸ்லிம்கள் ஓட்டு இல்லாத வெற்றி ஒருபோதும் எனக்கு மகிழ்ச்சி தராது.  அதே நேரத்தில், தேர்தலுக்கு பிறகு என்னோட  தயவுதான் உங்களுக்கு தேவைப்படும். அப்போது, ஏதாவது வேலை செய்து தர வேண்டுமென நீங்கள் என்னிடம் வந்தால், அது எனக்கு கசப்பான உணர்வை ஏற்படுத்தும்.

நாம் ஒன்றும் மகாத்மா காந்தியின் குழந்தைகள் கிடையாது. ஏதையுமே பெற்றுக் கொள்ளாமல், வெறுமனே கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு. தேர்தல் கூட கொடுக்கல் - வாங்கல் கணக்குதான். உங்களுக்கான நான் வேலை  செய்ய வேண்டும் என்றால், அதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்து தாருங்கள். இவ்வாறு மேனகா பேசினார். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘சாதி, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கப் பார்க்கிறார் மேனகா’’ என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Menaka ,voters , Hey, here,, I'm Rowdy , voters, Threatened, Maneka
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்