×

முதல்வர் பதவியை ஏலம் எடுத்த ஒரே நபர் எடப்பாடி.... முத்தரசன் விளாசல்

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் ராம்நகர் ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சத்யா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:நாட்டில் நமக்கான ஆட்சி தேவை. அம்பானிக்கான ஆட்சி தேவை இல்லை. உழைக்கும் மக்களுக்கான ஆட்சி, விவசாய மக்களுக்கான ஆட்சி, தொழிலாளர்களுக்கான ஆட்சி, இளைஞர்களுக்கான ஆட்சி, மாணவர்களுக்கான ஆட்சி, பெண்களை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தேவை. அப்படிப்பட்டி நல்லாட்சி அமைய திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் முதலமைச்சர் பதவியை ஏலம் எடுத்த ஒரே நபர் எடப்பாடிதான். செங்கோட்டையனை முதல்வராக்க முயன்றார்கள், அது நடக்கவில்லை. ஏலம் எடுத்தவர் லாபம் சம்பாதிக்காமல் இருப்பாரா. தற்போது, லாபம் பார்த்து வருகிறார். இந்த ஆட்சி மோடியால் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ள ஆட்சி. பாஜவிடமிருந்து இந்த தேசத்தை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.இவ்வாறு முத்தரசன் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Edappadi ,Mutharasan Vilasal , Chief Minister, auction,gonna
× RELATED தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க...