×

போர்களும்... பொதுத் தேர்தல்களும்....அது அந்தக்காலம்

கட்சிகளுக்கு இடையிலான போட்டாப் போட்டியால் தேர்தல் களம் எப்போதும் போர்களமாக காட்சியளிக்கும். இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு முன்பு நடந்த சில போர்கள், ஆளுங்கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்திருக்கின்றன. விடுதலைக்கு பிறகு இந்தியா இரண்டாக பிரிந்ததால் ஏற்பட்ட கலவரம், நாட்டின் எல்லையை போர்களமாக்கி இருந்தது. கூடவே காஷ்மீர் இணைப்பால் பாகிஸ்தானுடன் சண்டை வந்தது. இவையெல்லாம் நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் எதிரொலித்தது. காங்கிரசின் ஆட்சி தொடர்ந்தது.

தொடர்ந்து 1965ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் வீச்சு 1967 பொதுத் தேர்தலில் வெளியாக காங்கிரஸ் 4வது முறையாக அபார வெற்றிப் பெற்று ஆட்சிக் கட்டிலில் நிலையாக உட்கார்ந்தது. மேலும 1971ல் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசமாக உருவாக இந்தியா போர் புரிந்தது. மார்ச் முதல் வாரத்திலேயே பொதுத் தேர்தல் முடிந்து இந்திரா பிரதமராகி இருந்தார்.இதன் உச்சமாக இருந்தது 1999ல் நடந்த கார்கில் போரும், அடுத்து வந்த பொதுத் தேர்தலும் தான்.  கார்கில் போர் ஜூலையில் முடிந்தது. செப்டம்பரில் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் பாஜ மீண்டும் வென்றது. இந்த முறையும் புல்வாமாவில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து எல்லை தாண்டி தாக்குதல் என போர் மேகங்கள் சூழந்தன. ஆனால் பாகிஸ்தான் ‘எங்களுக்கு போர் செய்வதில் விருப்பமில்லை’ என்று நல்லவனாக காட்டிக் கொண்டன. அதனால் போர் முயற்சிகள் பலன் தரவில்லை. தேர்தல் முயற்சிகளாவது பலன் தருமா என்று பார்க்க மே 23ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections , Wars, General Elections
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு