×

அமமுகவில் இருந்து நீக்கியது ஏன்?...சொர்ணலட்சுமி திடுக் தகவல்

1 அமமுகவில் இருந்து உங்களை நீக்கும் அளவுக்கு என்னதான் பிரச்னை?கடந்த 2ம் தேதி விளாத்திகுளத்தில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரத்தில் கலந்து கொண்டு விட்டு, கோவில்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கினேன். கையில் ஆபரேசன் செய்ய ₹3 லட்சம் தேவைப்பட்டது. இதற்கு உதவி செய்யும்படி வேட்பாளரிடமும், மாவட்டச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவிடம் கேட்டேன். டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனாவிடமும் கேட்டேன். ஆனால் உதவி கேட்டவுடன் என்னிடம் பேசுவதை கட்சியினர் நிறுத்தி விட்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள எனக்கே உதவி செய்யாத இவர்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள்.

2 டிடிவி தினகரனிடம் புகார் தெரிவித்தீர்களா?
என் அப்பா, தீவிர திமுக தொண்டர். நான், ஜெயலலிதா மீது உள்ள பற்றுதலால் அதிமுகவில் உறுப்பினராக இருந்தேன். பின்னர் டிடிவி கட்சியில் சேர்ந்தேன். என் வேலையைப் பார்த்து தகவல் தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கினர். டிடிவி தினகரனை தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை. அங்கு அவரது உதவியாளர் ஜனாவை மீறி எதுவும் செய்ய முடியாது. அவரிடம் விபத்து குறித்து தெரிவித்தேன். அடுத்த நாள் போனை அவர் எடுக்கவில்லை. தினகரன் எவ்வளவு செலவு செய்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். எப்படி பணம் வருகிறது? என்பதும் தெரியும். தன்னுடைய வளர்ச்சிக்காக செலவு செய்யும் தினகரன், எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் இப்போதே தன்னை ஜெயலலிதா என்று நினைக்கிறார்.

3 உதவி செய்யவில்லை என்பதற்காக, கட்சியை விமர்சிப்பது நியாயமா?
நான் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். உழைப்புக்கு கூலி கேட்கவில்லை. என்னிடம் ₹10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்தது. தற்போது ₹23 ஆயிரத்து செல்போன் வாங்கி, கட்சியின் பிரசாரங்களை வேகமாக செய்து வருகிறேன். இதுவரை எங்கள் வளர்ச்சிக்காக எதையுமே கேட்கவில்லை. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள். எங்கள் மாவட்டத்தில் 99 சதவீதம் பேர், தினகரனின் சாதியை சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். அவர்களைத் தவிர கட்சியில் யார் இருந்தாலும் அவர்களை கட்சியை விட்டு விரட்டி விடுவார்கள். அதைத்தான் தற்போது என் விவகாரத்திலும் செய்துள்ளனர். நான் மட்டுமல்ல அரியலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சங்கீதாவும் விபத்தில் சிக்கினார். அவரை இதுவரை யாரும் போய் பார்க்கவில்லை. ஆறுதலும் சொல்லவில்லை. செலவுக்கு காசு கொடுக்கவில்லை. இதுதான் அமமுகவின் நிலை.

4 அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
என் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம்தான். என் அப்பா வழியில் திமுகவில் சேரப் போகிறேன். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு விபத்து என்று முகநூலில் கேள்விப்பட்டவுடன் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி போனில் பேசினார். அடுத்த நாள் மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் பேசினார். இருவரும் நேரில் வருவதாக தெரிவித்துள்ளனர். நான் திமுகவில் சேருவதற்கு முன்னரே அவர்களாக வந்து உதவி செய்கின்றனர். கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் தினமும் வந்து பார்க்கிறார். என் முகநூல் மு.க.ஸ்டாலின், கனிமொழி படத்தை வைத்ததால், அதை நீக்க வேண்டும் என்று கட்சித் தலைமை கூறியது. நான் கேட்காததால்,
கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
அமமுகவில் இருந்து
நீக்கியது ஏன்?...சொர்ணலட்சுமி
திடுக் தகவல்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amagakam, deleted,Surnalakshmi
× RELATED மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு