×

தேசத்தையே தெருவில் நிறுத்தியவர் மோடி: கரு.பழனியப்பன் ஆவேசம்

திரைப்பட இயக்குனர், நடிகர், தமிழ் ஆர்வலர் என்ற பல வடிவங்களை கொண்ட கரு.பழனியப்பன், தற்போது திமுக கூட்டணியை ஆதரித்து அரசியல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:  சினிமா துறையில் இருந்து அரசியல் களத்துக்கு நீங்கள் வந்த காரணம் என்ன? நான் இப்போது இல்லை. எப்போதிருந்தோ நான் அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கிறேன்.திமுக கூட்டணிக்கு ஆதரவாக திடீரென பிரச்சாரம் செய்வது ஏன்? தப்பு என்று சொன்னால், அப்போ எது சரி என்று ஒன்றை சொல்ல வேண்டுமே. ஆளும் பாஜகவும், அதிமுக அரசும் மிகவும் மோசமாக ஆட்சியை நடத்துகிறது. அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதோடு நிறுத்த கூடாது என்று நினைக்கிறவன் நான். இன்றைக்கு இருவரையும் ஒழிப்பதற்கான இடம் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி என்று நான் நினைக்கிறேன்.
மத்திய பாஜ அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது என்ற குரல் தமிழ் அமைப்புகள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறதே?

 தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே மத்திய பாஜ அரசு துரோகம் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறது என்பது மட்டும் எனது கோபம் அல்ல. அக்கட்சி நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது. தேசத்தை வஞ்சித்திருக்கிறது. நாட்டில் பணமதிப்பிழப்பில் தேசம் பூராவும் தெருவில் நின்றார்கள். அப்போது நாட்டில் என்ன நடந்தது? ஜிஎஸ்டி வரி குளறுபடி நாடு முழுவதும் தான் நடந்தது. அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள் என்பது அடுத்து, ஆனால் ஒரு தேசத்தையே வஞ்சித்தார்கள் என்பது தான் உண்மை.  தமிழகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?ஆளுங்கட்சி செயல்படவே இல்லையே. எப்போது அவர்கள் செயல்பட்டார்கள். அதிமுக இன்று பாஜக என்ற ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். அதிமுகவினர் ஒன்று சொல்கிறார்கள், வலியுறுத்துவோம்.. வலியுறுத்துவோம்.. என்று 100 வலியுறுத்துவோம் என்று அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொல்கிறார்கள். அதில் ஒன்று கூட அவர்கள் கூட்டணி கட்சியான பாஜ கட்சி தேர்தல் அறிக்கையில் இல்லையே. அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒன்றை கூட சொல்ல முடியாது.

ஸ்டெர்லைட் விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவை இந்த தேர்தலில் அதிமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?  கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மே.23ம்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கண்டிப்பாக எல்லோருக்கும் தெரியும். 22 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆட்சி ஆட்டம் காணுமா?  இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பது தான் எனது ஆசையும், உங்கள் ஆசையும். செயல்படவே இல்லை என்பது தான். எனவே, கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும். எழுத்தாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நீங்கள் இப்போது திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறீர்களே?

 நான் முழுமையாக திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்தேன். ஒரு வேளை எழுத்தாளர் வெங்கடேசன் இந்த கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் அவருக்காக நான் பிரச்சாரம் செய்திருக்க மாட்டேன்.
பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி தான் வெற்றி பெற்றார் என்ற கோஷம் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஓங்கி ஒலிக்கிறதே?  பாஜ கட்சிக்கே நான் ஒன்றை சொல்கிறேன். கடந்த 30 ஆண்டு காலமாக ராமர் கோவில் கட்டுவேன் என்று சொல்லி வருகிறார்கள். எப்போது கட்டுவார்கள். அவர்கள் எப்போது கட்டுவார்கள் என்று பாஜ கட்சியை விட நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்த உதாரணம் ஒன்று போதும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார். இவர் ஆட்சியில்தானே பல மடங்கு உயர்ந்தது. அவர் இன்னொரு கிட்னியை எடுக்கத்தான் வாவா என்கிறார். தமிழக மக்கள் தெளிவாய் இருக்க வேண்டும். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,nation ,street , Narendra Modi
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...