×

பாட்னா மைந்தன் ரிட்டன்ஸ்!

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் சத்ருகன் சின்ஹா. 73 வயதாகும் சின்ஹா, இளம் வயதில் கல்லூரி படிப்பு முடித்ததும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றார். சினிமாவில் ஸ்டார் ஆக வேண்டும் என்ற கனவோடு தொடர் முயற்சிகள் செய்தவர், 1960களில் இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பிறகு திடீரென வில்லனாகி பிரபலமானார். 1974ல் தர்மேந்திராவுடன் தோஸ்த் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அது அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. 1976ல் காளிச்சரண் படத்தில் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். காரணம், காளிச்சரணில் நடிக்க வேண்டியது அப்போதைய சூப்பர் மெகா ஸ்டார் ராஜேஷ் கன்னா. 1976, 77 என இரண்டு வருடத்துக்கு கால்ஷீட் இல்லை என கன்னா பின்வாங்க, படத்தின் இயக்குனர் சுபாஷ் கய் தேர்வு செய்தது சத்ருகன் சின்ஹாவைத்தான். இது தயாரிப்பாளர் சிப்பிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய கேரக்டரில் வில்லனாக நடித்தவரை ஹீரோவாக்குவதா? இது எடுபடுமா? என யோசித்தார். சுபாஷ் கய் அவருக்கு நம்பிக்கை கொடுத்து படத்தை ஆரம்பித்தார்.
படம் வெளிவந்ததும் சத்ருகனின் ஸ்டைல் பரபரப்பாக பேசப்பட்டது. எந்த ஸ்டைலை அவர் வில்லத்தனத்துக்கு பயன்படுத்தினாரோ அதே ஸ்டைலைத்தான் லேசாக மாற்றி ஹீரோயிசத்துக்கும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட அவரது ஸ்டைலை தமிழில் வில்லனாக நடித்தபோது பின்பற்றியவர்தான் ரஜினி. இருவருக்கு இடையே அப்போதே நல்ல நட்புக்கு இந்த நடிப்பு ஒற்றுமையும் ஒரு காரணமாக அமைந்தது.

1990களில் அரசியல் ஆர்வத்தில் பாஜவில் இணைந்தார். அப்போது வாஜ்பாய், அத்வானிக்கு நெருக்கமாக இருந்தார். 2003ல் வாஜ்பாய் ஆட்சியில் கேபினட் அமைச்சராக இருந்தார். 2009ல் சொந்த ஊரான பாட்னா சாகிப்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். பாஜவில் தொடர்ந்து செல்வாக்குடன் இருந்த சின்ஹா, மோடி வந்ததும் ஓரம் கட்டப்பட்டார். அதற்கு காரணம் இவர், அத்வானி ஆதரவாளர் என்பதுதான். அப்போதிலிருந்து மோடியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால் இந்த தேர்தலில் பாஜ இவருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அந்த கோபத்தில் ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸில் இணைந்ததுடன் மீண்டும் பீகார் பாட்னா சாஹிப்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சத்ருவை எதிர்த்து மத்திய அமைச்சர் ரவிசங்கர பிரசாத் போட்டியிடுகிறார். இவரும் பாட்னாவாசி என்பதால் போட்டி கடுமையாக இருந்தாலும் தனக்கே உரிய ஸ்டைலான பேச்சு பிரசாரத்துடன் சாதிக்க காத்திருக்கிறார் மண்ணின் மைந்தன் சத்ருகன் சின்ஹா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Patna , Patn
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!