நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர்கள்: நடிகர் இமான் அண்ணாச்சி வேண்டுகோள்

வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்  டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து,  நடிகர் இமான் அண்ணாச்சி திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்கினீர்கள். என்ன ஆயிற்று. பெட்ரோல் விலை உயர்ந்தது. ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கின. 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாது என திடீரென்று மோடி அறிவித்ததால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் திமுகவினர் மட்டுமல்ல, பொதுமக்கள் மட்டுமல்ல, மாற்று கட்சியினர் கூட பாதிக்கப்பட்டார்கள். எனவே அனைவரையும் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன், நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கிய பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

 இளைஞர்களே படித்தவர்களே பகுத்தறிவு மிக்கவர்களே தயவுசெய்து நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் அது நாட்டைக் கூறு போட நினைக்கும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சாதகமாகிவிடும். எனவே இந்த நாட்டை காப்பாற்ற ராகுலை பிரதமர் ஆக்க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். வடசென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>