×

ஒருநாளும் மூடப்போவது இல்லை: திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா

திமுக பொறுத்தவரை ஒயின் ஷாப்பே இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை. அதிமுக படிப்படியாக குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் வியாபாரம் ஆகாத கடைகளை மட்டுமே எடுத்தார்கள்.  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்வது கூட கிடையாது. அப்படிப்பட்ட கடைகளில் மக்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதை கூட யாரும் கேட்பதில்லை. குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் மக்களின் எதிர்ப்பை காவல் துறையை கொண்டு அடக்குகிறார்கள். அவர்களை கேட்டால், படிப்படியாக குறைப்போம் என்று தான் சொல்வார்கள். அப்படி சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை.
 ஜெயலலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலின் போது படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதை இவர்கள் கொஞ்சம் கூட சட்டை கூட பண்ணவில்லை. அவர்கள் எப்படி பண்ணுவார்கள். அதை வைத்து தானே வருமானம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடினால் அவர்களின் வருமானம் எல்லாம் போய்விடுமே? அதை வைத்து தானே மாதத்துக்கு ரூ.200 கோடி வரை கொள்ளையடிக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு ரூ.200 கோடி வரை அவர்களுக்கு கமிஷனாக செல்கிறது.

 நாட்டு மக்களை பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்கிறது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அதிகரிக்கும் செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்க தான் செய்யும். எடப்பாடி அரசை ஒரு கவர்மெண்டாகவே மக்கள் பார்க்கவில்லை.   அவர்களை ஒரு கொள்ளை கூட்டமாக தான் பார்க்கிறார்கள். இவர்களுக்கு என்ன நிர்வாகம் தெரியும். சொந்த மூளை அவர்களுக்கு எங்கே இருக்கிறது. மோடியின் தயவால் ஆட்சி நடத்துகிறார்கள். இவர்கள் ஒரு நாளும் டாஸ்மாக் கடைகளை மூடப்போவதில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,MLA ,SR Raja , DMK MLA SR Raja
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...