×

ஜெயலலிதா வாக்குறுதியை மறந்து அதிமுக அரசு இரட்டை வேடம்: குடிப்பவர்கள் நலனா? டாஸ்மாக் குடிமக்கள் நலனா? படிப்படியாகமூடப்படும்

தமிழக அரசின் வருமானமே டாஸ்மாக் மூலம் தான் என்று சொல்லும் அளவுக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. தமிழகமே போராட்ட களமாக மாறியதால், கடந்த 2016 தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டன. அவர் மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் மேலும் 500 கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் எடப்பாடி அரசோ தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து 1,300 கடைகளை மீண்டும் திறந்தது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை மீறியது  குறித்து திமுக- அதிமுக நிர்வாகிகளுக்கிடையேயான கருத்து மோதல்களை பார்ப்போம்.

2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட டாஸ்கடைகளை அதிமுக அரசு மூடியுள்ளது. தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவச ஆடு, மாடு, பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்ஸி, மாணவர்களுக்கு பல்வேறு இலவச சலுகைகளை அதிமுக அரசு வழங்கியுள்ளது. இதற்கு போதுமான நிதி தேவைப்படுகிறது. அதனால் டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது. ஆனாலும், டாஸ்மாக் கடைகளை மூடி படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் நோக்கம் ஆகும்.  மக்களவை தேர்தல் முடிந்தவுடன் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்த அறிவிப்பு கண்டிப்பாக வரும். வருகிற 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலின்போது கண்டிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விடும். தமிழகத்தில் வருவாயை பெருக்க அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்கும். அதன்படி, தமிழகத்தில் ஆற்று மணலை எடுத்து விற்பதற்கு பதில், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  இதுபோன்ற சில திட்டங்கள் அரசிடம் உள்ளது. அதை செயல்படுத்தி, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை சமாளிக்க முடியும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Tasman ,Counsel ,Patippatiyakamutappatum , Jayalalithaa, promise, AIADMK government
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...