×

இலங்கை அதிபர் தேர்தலில் கோதபைய ராஜபக்சே களமிறங்க தயாராகிறார்: அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய முயற்சி

கொழும்பு,:  இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட , ராஜபக்சேவின் சகோதரர் கோதைபய ராஜபக்சே தயாராகி வருகிறார். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜபக்சேவின்  சகோதரர் கோதபைய ராஜபக்சே இருந்தார்.  தற்போதைய அதிபர் சிறிசேனாவின் ஆட்சிக்காலம் முடிய உள்ள நிலையில், வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ராஜபக்சே ஏற்கனவே 2 முறை அதிபர் பதவி வகித்ததால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, அவரது கட்சி சார்பில் கோதபைய ராஜபக்சேவை களமிறக்க முயற்சி நடக்கிறது. இவர் ,அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். இதற்காக அமெரிக்கா சென்று நேற்று நாடு திரும்பிய அவர், கொழும்புவில் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரத்து செய்வதில் சிக்கல்
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது,  சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக கோதபைய ராஜபக்சே மீது அமெரிக்காவில்  2 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர் தனது அமெரிக்க குடியுரிமை ரத்து செய்து விட்டு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இந்த வழக்குகள் இப்போது முட்டுக்கட்டையாக உள்ளன. ‘எனது குடியுரிமை ரத்து முயற்சிக்கு தடையாக இருக்கவே, இந்த வழக்குகள் என் மீது அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gotabhaya Rajapakse ,election ,Sri Lankan ,American , Sri Lankan presidential election, Gotabhaya Rajapaksa
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை