×

அரசியல் ஆதாயத்துக்காக ராணுவத்தை பயன்படுத்துவது தவறு: ஜனாதிபதிக்கு முன்னாள் தளபதிகள் கடிதம்

புதுடெல்லி: ‘அரசியல் ஆதாயத்துக்காக ராணுவ வீரர்கள், அவர்களின் சாதனைகளை பயன்படுத்துவது தவறு. ’ என ஜனாதிபதிக்கு முன்னாள் ராணுவ தளபதிகள், கடிதம் எழுதியுள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் பாஜ அரசுக்கு கிடைத்த வெற்றியாக கூறப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட, ‘மோடியின் சேனை’ என்று ராணுவ வீரர்களை குறிப்க்கு பிட்டு பேசியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  இது குறித்து முன்னாள் ராணுவ தளபதிகள் ஜெனரல் ரோட்ரிகஸ், சங்கர் ராய் சவுத்ரி உட்பட  148 ராணுவ அதிகாரிகள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது உட்பட ராணுவ தாக்குதலுக்கான பலனை அரசியல் தலைவர்கள் தங்கள் சாதனையாக கூறி வருவது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. இது, ராணுவத்தில் பணியாற்றிய எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் படத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : army ,gain ,president ,commander , President, Former Commanders, Letter
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...