நடுவருடன் வாக்குவாதம்: டோனிக்கு அபராதம்

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் டி20 போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 5.5 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ராயுடு - கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. ராயுடு 57 ரன் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அடுத்த பந்து நோ பால் ஆக 1 ரன் கிடைத்தது. பிரீ ஹிட்டில் டோனி 2 ரன் எடுத்தார். அடுத்த பந்தில் டோனி (58 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 3 பந்தில் 8 ரன் தேவை என்ற நிலையில், சான்ட்னருகு ஸ்டோக்ஸ் வீசிய பந்து இடுப்புக்கு மேலே புல்டாசாக சென்றதாக கணித்த நடுவர் நோ பால் என அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் அதை நோ பால் இல்லை என மறுத்தார்.

இதனால் கடுப்பான டோனி களத்துக்குள் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்டோக்ஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, களத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் நடுவர்கள் தங்கள் முடிவை மாற்ற மறுத்துவிட்டனர். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் கடைசி பந்தை சான்ட்னர் சிக்சராக விளாச, சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. நடுவர்களுடன் டோனி வாக்குவாதம் செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை குழு, விதிகளை மீறி நடந்துகொண்ட அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக நேற்று அறிவித்தது.  கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் தனது 100வது வெற்றியை பதிவு செய்த டோனி, தனது இயல்புக்கு மாறாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : middleman ,Dhoni , Dhoni ,fine
× RELATED அயோத்தி நில உரிமை வழக்கில் இன்று மாலை 5...