×

நிலவில் மோதியது இஸ்ரேல் விண்கலம்... பல துண்டுகளாக நொறுங்கியது

டெல் அவிவ் : நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இஸ்ரேல் விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் பெரஷீட் என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம்,  2 மாதங்களாக பூமியைச் சுற்றி வந்த நிலையில், அதன் பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.  நேற்று இரவு நிலவில் தரையில் இறங்கும் நேரத்தில், விண்கலம் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்தின் பொது மேலாளர் ஓபர் டோரன் கூறியதாவது:

நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக, தனியார் நிறுவனத்தின் நிதி உதவியோடு அனுப்பப்பட்ட முதல் லூனார் விண்கலமாகும். இந்த விண்கலம் நிலவின் மேலடுக்கில் விழுந்து பல துண்டுகளாக நொறுங்கியது.  அந்த விண்கலம் நிலவில் இறங்க அதிவேகமாக சென்றுள்ளது. அதனால் இவ்வாறு நடந்திருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.  மேலும் இந்த விண்கலம் தோல்வி அடைந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த சம்பவம் விஞ்ஞானிகளுக்கு வருத்தமளித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Israeli ,ground , Israel's Beresheet, spacecraft crashes , Moon
× RELATED இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி