தாயும் மகனும் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டு இளைஞர் கைது: கொள்ளையடிக்க தடையாக இருந்ததால் ஆத்திரம்!

திருத்தணி: திருத்தணி அருகே தாயும் மகனும் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்திணி-அரக்கோணம் சாலையில் உள்ள பெருமாள்தாங்கல் புதூர் கிராமத்தில் வசித்து வந்த வீரலட்சுமியும்(40), அவரது மகன் போத்திராஜும்(10) கடந்த 9ம் தேதியன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். நெடுஞ்சாலையோரம் வீடு அமைந்திருப்பதால் ஏதேனும் கொள்ளை கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீரலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடசேனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

ஒரு கட்டத்தில் வெங்கடேசன், உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறிய காவல்துறையினர் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். வீரலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன், பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். வியாபாரம் நலிவடைந்ததால் நஷ்டத்தை ஈடுகட்டவதற்காக பணம் திருட்டு முயற்சியில் இறங்கிய அவருக்கு ஏமாற்றங்களே மிஞ்சியுள்ளன. செய்வதறியாமல் திகைத்த வெங்கடேசன், ஒரு கட்டத்தில் கொள்ளையடித்தாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ தினத்தன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் முன் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த போது வீட்டிலிருந்து சத்தம் வரவே உள்ளே சென்று பார்த்துள்ளார்.

வீரலட்சுமியின் வீட்டின் பின்புறம் ஏறி குதித்த வெங்கடேசன், அங்கிருந்த அறையின் வினக்கை அனைத்துவிட்டு உள்ளே பதுங்கியிருந்துள்ளார். அப்போது வெளியே வந்த வீரலட்சுமி வெங்கடேசனை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு கூச்சலிட்டுள்ளார். பதற்றமடைந்த வெங்கடேசன், தான் அடையாளம் காணப்பட்டுவிட்டதால் எப்படியும் காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்வோம் என அஞ்சி சமையலறையில் இருந்த அறிவாள்மனையால் வீரலட்சுமியின் பின் தலையில் பலமாக வெட்டி கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. வீரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது 10 வயது மகன் போத்திராஜை இஸ்திரி பெட்டி ஒயரால் கழுத்தை நெறித்து கொலை செய்த வெங்கடேசன், வீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : neighborhood youth , Tiruthani, mother son, murder, robbery, arrest
× RELATED கள்ளக்காதலை கைவிட மறுத்த தாய்,...