பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி

புதுடெல்லி: பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் அனுமதி கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆலையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை அந்நிறுவனம் அணுகியது. ஸ்டெர்லைட் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம்  முறையீடு செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பிரதமரிடம் திமுக மனு