×

டெல்லியில் பாஜக உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது : பிரச்சார யுக்திகள் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை!

புதுடெல்லி : இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் முதல்கட்டமாக நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று பாஜக உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் நேற்று முடிந்த 20 மாநில மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் மத்திய அரசின் மீதான மக்கள் மத்தியில் நிலவும் எண்ணங்கள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரசார யுக்திகள் மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பிரதமர் இன்று 3 மாநிலங்களில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்கிறார். மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு இன்று இரவு மதுரைக்கு வர உள்ளார். நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்லும் அவர், அங்கு பகல் 11 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார், ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதனை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்லும் மோடி பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Delhi , BJP, High House, Campaign, Lok Sabha election
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...