×

இட்லி, சாம்பாருக்குமா ஜி.எஸ்.டி வரி?....கேள்வி கேட்கிறார் ஆர்.எஸ். பாரதி

அரக்கோணம் தொகுதியில் பிரசாரத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:  தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இறந்துவிட்டனர். ஆனால், இத்தேர்தலில் பணத்திற்கு ஓட்டு விற்காமல்  வலிமையான ஜனநாயகத்தை உறுதி செய்ய அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.  
ஜி.எஸ்.டி வரி என்ற பெயரில் பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளால்  நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இட்லி, சாம்பாருக்கும் ஜி,.எஸ்.டி வரி விதித்தவர் தான் மோடி. நூலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பால்  நெசவு தொழில் முடங்கி நெசவாளர்கள் வாழ்வாதாரம் இன்றி  அவர்களது குடும்பங்கள்  கடும் அவதிப்பட்டு வருகின்றது.  நெசவுக்கு ஜி.எஸ்.டி வரி ரத்து செய்ய திமுகவை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GSD ,Bharti , Idli, Sambharguma ,GST tax, RS. Bharti
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!