×

30 ஆண்டு அதிபராக இருந்த பஷீர் பதவி பறிப்பு சூடானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது

கார்டோம்:  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1989ம் ஆண்டு சதியின் மூலம் ஆட்சியை பிடித்தவர் தற்போதைய அதிபர் உமர் அல் பஷீர். 30 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு மக்களை ஒடுக்கி ஆட்சி நடத்திய அவர் இனப் படுகொலை, உள்நாட்டு போர், போர் குற்றங்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு டிசம்பர் முதல் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 49 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, போராட்டத்தில் தலையிட்ட ராணுவத்தினர், ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை கூடமாக திகழும் இஸ்லாமிக் அமைப்பு அலுவலகங்கள், கட்சித் தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அத்துடன், அதிபர் உமர் அல் பஷீரை பதவி நீக்கம் செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் அவாத் இப்னோப், ``பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதிபர் பாதுகாப்பான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். பஷீரின் ஆட்சிக்கு மாற்றாக, இடைப்பட்ட 2 ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெறும். நாட்டில் உள்ள அனைத்து எல்லைகளும் வான்வழிகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகின்றன’’ என்று வருத்தம் தோய்ந்த தொனியில் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bashir ,military ,Sudan , Bashir, 30 years old, Military , power , Sudan
× RELATED ராணுவ பயிற்சிக்காக இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியா வருகை