×

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நாடு முழுவதும் என்ஆர்சி திட்டம்: அமித்ஷா உறுதி

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் ராஜூ சிங் பிஷ்த்தை ஆதரித்து நேற்று அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மகிழ்ச்சி அடையவில்லை. மத்தியில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்ததும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370வை நீக்குவோம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடிமக்கள் திருத்த மசோதா குறித்து மம்தா பானர்ஜி மக்களுக்கு தவறான தகவல் அளிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பாஜ அரசு நிச்சயம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டு வரும். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்து அகதிக்கும் குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NRC ,Amit Shah ,Kashmir , Kashmir, cancel, special status, Amit Shah
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...