×

காஷ்மீர் மாநிலத்தில் பாஜ.வுக்கு வாக்களிக்கும்படி ராணுவ வீரர்கள் நிர்பந்தம்: பிடிபி, தேசிய மாநாட்டு கட்சி புகார்

ஜம்மு: பாஜவுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை துணை ராணுவ  வீரர்கள் நிர்பந்தம் செய்வதாக, தேசிய மாநாட்டு கட்சியும், பிடிபி.யும் புகார் செய்துள்ளன.
 மக்களவை  தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பிடிபி (மக்கள் ஜனநாயக கட்சி) தலைவர் மெகபூபா முப்தி டிவீட்டில், பாஜவுக்கு வாக்களிக்காத சில வாக்காளர்களை பிஎஸ்எப் வீரர்கள் கடுமையாக நடத்தியது’ என்று கூறியிருந்தார்.

அவரது வீடியோவில் பாஜவுக்கு எதிராக வாக்காளர்கள் கோஷமிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன மெகபூபா முப்தி வெளியிட்ட பதிவில், ‘ஒரு வாக்காளர் பாஜவுக்கு வாக்களிக்க மறுத்ததால் அவரை இழுத்து வந்து வெளியேற்றுகின்றனர். எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற துடிப்பில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.  தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு மாகாண தலைவர் தேவிந்தரும், அராய் மால்கா பகுதியில், வாக்காளர்களை பாஜவுக்கு வாக்களிக்குமாறு பிஎஸ்எப் வீரர்கள் நிர்பந்தப்படுத்தியதை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Soldiers ,Kashmir ,BJP ,National Conference Party ,PDP , BJP , Kashmir, Soldiers forced, PDP, National Conference party
× RELATED பூஞ்ச் ​​பகுதியில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் காயம்