கல்வீசி விரட்டியடித்த பொதுமக்கள் மறைக்க முயன்ற நயினார் நாகேந்திரன்: வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி

ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட விரும்பாத பாஜ நிர்வாகிகள் இந்த சம்பவங்கள் குறித்து புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி அருகே மணக்குடி பகுதியில் நயினார் நாகேந்திரன் வாக்குக் கேட்டு சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள் மீது கற்களை வீசினர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து சென்றனர்.

ஆனால், இதன்பேரில் எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று பாஜ வேட்பாளர் மற்றும் அதிமுக கூட்டணியினர் தரப்பில் கேட்டுக் கொண்டதால், அந்த நபரை போலீசார் விடுவித்தனர். ஆனால் இந்த மோதல் காட்சிகள் வாட்ஸ்அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனாலும் தேர்தல் அதிகாரி சற்குணம் கொடுத்த புகாரின் பேரில், பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர் மீதும் திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>