நுறுக் ....

அமித்ஷா பெயரை சொன்னால் நடுங்குகிற அரசு: வைகோ-(மதிமுக பொதுச் செயலாளர்)
அமித்ஷா பெயரை சொன்னால் பதறி நடுங்குகிற அரசாக இருப்பதற்கு காரணம். பருப்பு ஊழல், ஆம்னி பஸ் ஊழல், கல்வி துறையில் ஊழல், பொதுப்பணி துறையில் ஊழல், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் என இத்தனை ஊழல்கள் சேர்ந்து அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை நுழைந்து கைப்பற்றிய ஆவணங்களுக்கு என்ன விடை.

தெரியாத சின்னம் தான்... என் சின்னம்...சீமான்-( நாம் தமிழர் கட்சி)
இப்ப என் மக்களிடம்... என்ன கெஞ்ச வேண்டியது இருக்குனா... அம்மா நீ ஓட்டு  பெட்டி கிட்ட போய் அதில் எந்த சின்னம் தெரியலையோ அதுதான் மா... என் சின்னம். இந்த சின்னத்திலும் எங்களை சம்சாரி வாழ்க்கை போல சாம்பலா போச்சி.

நான் ஒரு விவசாயிங்க..... உழைத்து வந்தேங்க...திண்டுக்கல் லியோனி-(திமுக பேச்சாளர்)
எடப்பாடி பழனிசாமி எப்படி பேசுகிறார் தெரியுமா. நானுங்க... ஒரு விவசாயிங்க...நான் உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். உழைப்பு என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு. நீங்கள் எப்படி உழைத்து வந்தீங்க என்று நாங்கள் டி.வி.யில் பார்த்தோமே.

தம்பிதுரையின் கைத்தடி.....செந்தில் பாலாஜி-( முன்னாள் அமைச்சர்)
தம்பிதுரைக்கு ஒரு கைத்தடி இங்க ஒரு பையன் இருக்கான். மந்திரியாக இல்லாத அப்ப பாதி நேரம் என் அறையில் தான் அதிக நேரம் இருப்பான். பொதுவா நாங்கள் என்ன சொல்லுவோம்னா... தப்பா எடுத்துக்க வேண்டாம்... நாங்கள் குட்டை பையன் என்று தான் சொல்லுவோம். அவ்வளவு ெபரிய நடிகன் தான் விஜயபாஸ்கர்.

மோடியிடம் உஷாரா இருங்க:செந்தில் - நடிகர்
மோடி என்பது ஒரு மாயை. இந்த முறை மோடியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் ேசர்த்து கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். முன்பு எல்லாம் பணத்தை சூட்கேசுகளில் வாங்கினார்கள். இப்போது லாரிகளில் வாங்குகிறார்கள்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fringe ....
× RELATED கடலில் விழுந்து மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது