தென்சென்னை முழுவதும் சிசிடிவி பொருத்தி பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பேச்சு

சென்னை: தென்சென்னை தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட மேட்டு தெரு, காந்தி ரோடு சிக்னல், திரவுபதி அம்மன் கோயில், கஜநாதபுரம், பிராமணர் தெரு, ஏரிக்கரை, என்ஜிஓ காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டார். அவருடன் தென்சென்னை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வேளச்சேரி சரவணன், பொருளாளர் சண்முகர், பகுதி செயலாளர் சந்திர போஸ், வட்ட செயலாளர்கள் ஏழுமலை, ரமேஷ்குமார் உட்ட ஏராளமான கட்சியின் அவருடன் சென்றனர்.

பிரசாரத்தின் போது இசக்கி சுப்பையா பேசியதாவது:

தென்சென்னையை பொறுத்தவரை குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு கட்டாயம் தீர்வை ஏற்படுத்தி தருவேன். வேளச்சேரி, தரமணி பகுதிகளை பொறுத்தவரை ஐடி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. பிரதான தெருக்களில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், உட்புற பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை. இதனால் குற்றங்கள் பெருகி வருகின்றன. மேலும் உள்புற பகுதிகளுக்கான மினி பஸ் சேவையும் முடங்கிவிட்டதாக கூறினர். இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முழு தீர்வை ஏற்படுத்த எனக்கு ஒரு அங்கீகாரத்தை நீங்கள் தர வேண்டும். காவல் துறை ஒத்துழைப்புடன் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு சிறப்பு...