×

தேர்தல் செலவுக்கு ₹50 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டும் அதிமுக பகுதி செயலாளர்: வைரலாக பரவும் ஆடியோ

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரிடம் தேர்தல் செலவுக்காக அதிமுக பகுதி செயலாளர் ₹50 லட்சம் பணம் கேட்டு  மிரட்டுவது போல் வெளியாகி இருக்கும் ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதிமுக கூட்டணி சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிகவை சேர்ந்த அழகாபுரம் மோகன்ராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் அதிமுக பகுதி செயலாளர் கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாலன் என்பவரிடம் தேர்தல் செலவுக்காக ₹50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவின் விபரம்:

பாலன்: யாருங்க?
கிருஷ்ணன்: யாரு பாலனா?
பாலன்: ஆமாம். என்ன வேணும்?
கிருஷ்ணன்: என்ன வேணுமா? எலெக்‌ஷன் செலவுக்கு ₹50 லட்சம் வேணும்.
பாலன்: அப்படியா.. இருய்யா இதை வாட்ஸ் அப்பில் போடுகிறேன்.
கிருஷ்ணன்: போடு.. போடு..
பாலன்: இதை போலீஸ்ல கம்ப்லெய்ன் கொடுக்கிறேன். கமிஷனர் கிட்ட கம்ப்லெய்ன் தருகிறேன். ரவுடியுசம் பண்ணுறீங்களா? இருங்கய்யா உங்கள பார்த்துக்கிறேன்.
இவ்வாறு முடியும் அந்த ஆடியோ தற்போது வேகமாக பரவி வருவதால் தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை செய்வதாக கூறப்படுகிறது. எனது குரல் இல்லை இந்த ஆடியோ குறித்து திருவொற்றியூர் அதிமுக பகுதி செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘இது, என்னுடைய குரல் இல்லை. எனக்கு எதிராக யாரோ சதி செய்கிறார்கள்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : industrialist ,AIADMK , Election, cost, money, AIADM, spread, audio
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...