வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவேன்... போலார்டு நம்பிக்கை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் போலார்டு 31 பந்தில் 3 பவுண்டரி, 10 சிக்சருடன் 83 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவரது அதிரடியால் மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து வென்றது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் (100* ரன்) மற்றும் கிறிஸ் கேலின் (63) விளாசல் வீணானது.

இமாலய சிக்சர்களாகப் பறக்கவிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய போலார்டு, எதிர்வரும் ஐசிசி உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையேயான மோதலில் எங்களைப் போன்றவர்களை பிளாக் லிஸ்ட் செய்துவிட்டனர். தற்போது நிர்வாக ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள், மீண்டும் தாய்நாட்டுக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் நான் மட்டுமல்ல... ரஸ்ஸல், கேல், நரைன், ஜோசப், பிராவோ என்று பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இதன் பிறகாவது உலக கோப்பையில் விளையாட தேர்வுக் குழுவினர் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைக்கிறேன்’ என்றார். 2016 அக்டோபரில் ஒருநாள் போட்டியில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>