125வது கோல் ரொனால்டோ அசத்தல்

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தனது 125வது கோலை பதிவு செய்து அசத்தியிருக்கிறார். தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அஜாக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட கால் இறுதியில் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார். ஜுவென்டஸ் சார்பில் ரொனால்டோ 45வது நிமிடத்தில் கோல் அடிக்க, அஜாக்ஸ் வீரர் நெரெஸ் அடுத்த நிமிடத்திலேயே பதில் கோல் போட்டார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு முதல்கட்ட கால் இறுதியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைட்டட் அணியை வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைட்டட் வீரர் ஷா 12வது நிமிடத்தில் ‘ஓன் கோல்’ போட்டது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்...